வியாழன், 16 ஏப்ரல், 2015

பிசுபிசுப்பு ! : சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம்... : மூன்று சதவீதத்தினர் மட்டும் பங்கேற்பு Dinamalar

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம், பிசுபிசுத்தது. மாவட்டத்தில் உள்ள 5,107 சத்துணவு பணியாளர்களில் 154 பேர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 2,386 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 5,107 சத்துணவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சத்துணவு மையங்களில் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 13 ஆயிரத்து 372 மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி, கள்ளக்குறிச்சி, காணை, கோலியனூர், உளுந்தூர்பேட்டை, ஒலக்கூர், ரிஷிவந்தியம் ஒன்றியங்களை சேர்ந்த 154 சத்துணவு ஊழியர்கள் மட்டுமே வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று, பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
இவர்களுக்கு பதிலாக மாற்று ஊழியர்கள், அந்தந்த மையங்களில் பணி யில் ஈடுபடுத்தப்பட்டு, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில், 2 லட்சத்து 80 ஆயிரத்து 59 மாணவர்களுக்கு நேற்று சத்துணவு வழங்கப்பட்டது. மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள 122 சத்துணவு மையங்களில் 239 பேர் பணி புரிகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று பணிக்கு வந்திருந்தனர். ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள 103 சத்துணவு மையங் களில் 219 பேர் பணிபுரிகின்றனர். இதில் 23 பேர் மட்டும், பணிக்கு வரவில்லை.
பூட்டு உடைப்பு :
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியின் சத்துணவு மையத்தின் அறையை ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர். இதனை யடுத்து சத்துணவு மைய கதவின் பூட்டை நேற்று காலை உடைத்து சுய உதவிக் குழு பெண்கள் மூலம் சமைத்து மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அரசு மகளிர் பள்ளி சத்துணவு மையம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பணியை கலெக்டர் சம்பத் நேரில் சென்று பார்வையிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாவட்டத்தில் உள்ள 5,107 சத்துணவு பணியாளர்களில் 4,953 பேர் நேற்று பணிக்கு வந்திருந்தனர். வேலை நிறுத்த போராட்டத்தில், 154 பேர் மட்டுமே பங்கேற்று, பணியை புறக்கணித்தனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்