சனி, 16 மே, 2015

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் டான்செட் தேர்வு: 41 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்


அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), மே 16,17 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ.-எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மே 16-ஆம் தேதியும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு மே 17-ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் பல்வேறு தேர்வு மையங்களிலம் மொத்தம் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.

சனிக்கிழமை (மே 16) காலை 10 முதல் 12 மணி வரை எம்சிஏ பிடிப்புக்கும், பிற்பகல் 2.30 முதல் 4.30 வரை எம்பிஏ படிப்புக்கும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்பிளான் படிப்புகளுக்கு மே 17- ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்