ஆசிரியர் கூட்டுறவு நலச்சங்கங்களில் வெளிமாவட்ட ஆசிரியர்கள் என்னும் தீண்டாமை.
கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய ஆசிரியர் கூட்டுறவு நலச்சங்க தலைவராக இருக்கும் திரு மகாராஜன் என்பவர் வெளிமாவட்ட ஆசிரியர்கள் என்னும் தீண்டாமை செயலை அரங்கேற்றி வருகிறார் அதன் விவரம் பின்வருமாறு...
மங்களூர் ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் கடன்கேட்ட விண்ணப்பித்த 38 ஆசிரியர்களில் 37 நபர்களுக்கு கடன் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆனால் திரு சிவக்குமார் என்பவருக்கு மட்டும் வழங்கப்படவில்லை ஏனெனில் அவர் வெளிமாவட்ட ஆசிரியர் என்ற ஒரே பாகுபாட்டினால் மட்டுமே....
மேலும் கடன்கேட்டு விண்ணப்பித்த பெரும்பாலான உள்ளூர் ஆசிரியர்களுக்கு அரசின் கூட்டுறவு சங்கத்தினை ஏமாற்றி 6 மாத காலத்திற்கு முன்தேதியிட்டு சந்தா செலுத்தி நிரந்தர உறுப்பினர் என்று நிர்ணயித்து உள்ளூர் ஆசிரியர்களுக்கு கடன் வாங்கி தருகிறார். ஆனால் வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு இச்சங்கத்தில் பேச்சுரிமை இல்லை மற்றும் வெளிமாவட்ட ஆசிரியர்களை தீர்மானம் போட்டு அடிப்படை உறுப்பினரிலிருந்து தூக்கி விடுவேன் என அரசியல்வாதி தொனியில் மிரட்டல் மட்டுமே அன்றி திரு மகாராஜன் அவர்களுக்கு ஒரு ஆசிரியருக்கான நடவடிக்கை இல்லை..
இது பற்றி ஏற்கனவே முதலைமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பிருந்தோம் சரியான பதிலிலை... விரைவில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை திரட்டி காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம் எச்சரிக்கை விடுக்கிறது.
0 comments:
கருத்துரையிடுக