நாகையில் ஆசிரியை மீது போக்குவரத்து காவலர் தாக்குதல்: பொதுமக்கள் சாலைமறியல்-நாகையில் ஆசிரியை மீது போக்குவரத்து காவலர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது இருதரப்புக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
நாகை நகராட்சி பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணியாற்றும் சர்மிளா என்பவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். நாலுகால் மண்டபம் அருகே அவரை வழிமறித்த போக்குவரத்து காவலர் காளிதாஸ், விதிகளை மீறி வந்ததாகக் கூறி தடுத்து நிறுத்தி உள்ளார்.
இதையடுத்து இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஆசிரியை ஷர்மிளாவை போக்கு வரத்து காவலர் தாக்கியதாக கூறப்படுகிறது, அப்போது அங்கு பொதுமக்கள் கூடிவிட்டதால் போக்குவரத்து காவலர் தப்பிச் சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது இருதரப்புக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.-


0 comments:
கருத்துரையிடுக