பள்ளிக் கல்வித் துறை நடத்தும் புத்தாக்க அறிவியல் ஆய்வுக் கண்காட்சியில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் மட்டும்தான் 1006 பேர் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வு விருதுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் புத்தாக்க அறிவியல் கண்காட்சி வழக்கமாக மாவட்டத்தில் ஒரே நாளில் நடத்தப்படும்.
ஆனால், திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 461 பேரின் படைப்புகள் வெள்ளிக்கிழமை
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதுபோன்று, வரும் 14-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 545 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மாணவர் ஒருவருக்கு ரூ.5000 வீதம் 1006 படைப்புகளுக்கும் தொகை வழங்கப்படும். மாவட்ட அளவிலான கண்காட்சியில் பங்கு பெறும் 1006 பேர்களில் 75 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.
தமிழகத்திலேயே திருச்சி மாவட்டத்தில்தான் அதிகளவில் 1006 மாணவர்கள் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. ஆனந்தி.

0 comments:
கருத்துரையிடுக