வியாழன், 16 ஜூலை, 2015

ஜீலை 16 தமிழக கல்வியின் கருப்புத்தினம்.

தமிழகத்தில் ஜீலை 15 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது.
அந்தகொண்டாட்டங்கள் நிறைவாகும் முன் ஜீலை16 கண்முன் நிற்கிறது.
இந்நாள் தமிழக் கல்வி வரலாற்றில் கருப்புதினம் என்றே கூறலாம்.
2004 ஆம்ஆண்டு கும்பகோணம் பள்ளி "தீ"பற்றி 94 பிஞ்சுக குழந்தைகள் கல்விக் கனவுகள் சுமந்துகொண்டு வெந்து கருகி மடிந்த தினம் .
தமிழக்கல்வித்துறை தனது பொறுப்பற்ற செயலால் 94குழந்தைகளை படுகொலை செய்தது என்றால் ,இது மிகையல்ல .
இன்னும் எவ்வளவு பேரை காவு வாங்கிட காத்திருக்கிறதோ ?மெளனசாட்சியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதோ ?எனும் அளவிற்கே இன்றும் தமிழக கல்வித் துறையின்ச்செயல்பாடுகள் இருக்கிறது ,என்கிற கூற்றும் மிகையானதல்ல .
கலவி வணிகமயமாகிறது ,தனியார்மயமாகிறது ,பொதுக் கல்வயில் தனியார் நுழைவதற்கு வாயில் தாரளாமாக திறக்கப்படுகிறது.
இவைகள் எல்லாம் கொல்லைப்புற வழியாக நுழையவில்லை;நடக்கவில்லை .
சட்டப்படியாகவே நுழைவதற்கு மத்திய ,மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்து தருகிறது.
பாரதி அவர் காலத்திலேயே தான் வாழும் ,வாழ்ந்த தமிழகத்தை "கல்விச் சிறந்த தமிழ்நாடு "என்று வாயார ,மனம் குளிர பாடினார் .மகாகவி
பாரதி இன்று இருந்திருந்தால் ?மனம் நொந்து என்ன சொல்லி வைவாரோ ,இகழ்வாரோ,புத்திமதி கூறுவாரோ...அம்மொழியில் கல்வி பற்றி இன்றைய தினத்தில் விவாதியுங்கள் ;பேசுங்கள் ;பொதுக்கல்வி மேம்பாட்டுக்கு உழைத்திடுங்கள் .
ஏனெனில் பொதுக் கல்விமுறைதான் நம்மை ,தமிழகத்தை இவ்வளவு உயரத்திற்கு
உயர்த்தி இருக்கிறது .
-முருகசெல்வராசன் .
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்