பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் ஆர்ச் அருகில் இன்று காலை மாணவர்களை ஏற்றி சென்ற தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் பள்ளிப்பேருந்து டிரைவரின் ஒழுங்கின்மை யாலும் , அதிக மாணவர்களை ஏற்றிச்சென்ற காரணத்தாலும் அதர பழசான பேருந்தினலும் விபத்துக்குள்ளானது.
பேரளி தொடங்கி கல்பாடி, எறையசமுத்திரம், மருவத்தூர் வழியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலைவழியே வந்த தனலெட்சுமி பள்ளி பேருந்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எற்றப்பட்டிருக்கின்றனர். குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற ஓட்டுனர் அதிவிரைவாக ஒட்டியதோடு மட்டுமலாமல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் வளாக சாலையிலிருந்து தனலெட்சுமி ஹோட்டல் அருகே வந்தபோது சாலையின் இடப்பக்கம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தல்தால் அதிவேகத்துடன் சாலையின் வலது புறமாக பேருந்தை அதிவேகத்தோடு வளைத்து ஓட்ட முயன்றிருக்கிறார். வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தனலெட்சுமி ஹோட்டலின் எதிர்புறம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் இருந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . ஒரு மாணவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பள்ளிக்குழந்தைகளை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் மருத்துவ மனைக்கும் அனுப்பிவைத்தனர்.
இவ்வளவு நடந்தும் மக்கள் எங்கே தனலெட்சுமி ஹோட்டலை உள்ளே புகுந்து சூறையாடிவிடுவார்களோ என்று எண்ணிய காவல்துறை ஹோட்டலின் வாயிலை மூடி பாதுகாப்பாக நின்றுகொண்டார்கள். இதனை கண்டு கடுப்பாகிய சிலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை அப்புறப்படுத்துவதில் காவல்துறை மும்முரமாக பணியாற்றியது.
இந்த விபத்து நமக்கு சில உண்மைகளை புரிய வைத்திருக்கிறது…
கோடை விடுமுறை முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. கடந்த மே மாதம் அனைத்து பள்ளிப்பேருந்துகளையும், பெரம்பலூர் RTO மற்றும் சப் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்ட வாகன ஆய்வை கடந்து வந்ததுதான் இந்த அதர பழசான பேருந்து . ஆய்வு நடந்த இடம் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரி மைதானம் என்பது தற்செயலாக நடந்ததல்ல. அதர பழசான இதுபோன்ற பல தனலெட்சுமி கல்லுரி மற்றும் பள்ளி பேருந்துகள் இன்னமும் பெரம்பலூர் RTO அனுமதியுடன் தான் ஓடிக்கொண்டிருகின்றன.
பள்ளி வாகனங்களுக்கு வேககட்டுப்பாடு கருவி அவசியம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் . இதை வாகன ஆய்வும் போதும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆனால் குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் என டிரைவர்களை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்துவதன் காரணமாக வாகனங்கள் அதிவிரைவாக இயக்கப்படுகின்றன. பெரம்பலூரைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி வானங்கள் எந்த வேக கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பதில்லை என்பது பெரம்பலூர் மக்களுக்கு நன்கு தெரியும் . ஆனால் விதிகளை செயல்படுத்தவேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
ஐம்பது மாணவர்களை மட்டுமே ஏற்றக்கூடிய பேருந்தில் 127 பேரை ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். பெற்றோர்களுக்கு இது தெரிந்திருந்தாலும் இதை தட்டிக்கேட்டால் குழந்தையின் கல்வி பாதிக்குமோ என்ற பயத்தில் கேட்பதில்லை என்பதை சாதகமாக்கி கொள்ளும் பள்ளிநிர்வாகங்கள் எந்த ஒரு சாலை விதியையும் மதிப்பதில்லை. சாதாரண ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் மறித்து பைன் போடுவதையும் மிரட்டுவதையும் வழக்கமாக செய்துவரும் RTO மற்றும் காவல் அதிகாரிகள் இது போன்ற விதி மீறல்களை கண்டுகொள்வதில்லை .
மற்றுமொரு விபத்து நடைபெறும் வரை அடுத்து நாமும் இதனை பெரிதாய் கண்டுகொள்ள போவதில்லை. அரசு நிர்வாகமும் கிடைப்பதை வாங்கிகொண்டு ஒதுங்கிகொள்ளும்… வாழ்க கல்வி வள்ளல்கள்.










0 comments:
கருத்துரையிடுக