ஞாயிறு, 26 ஜூலை, 2015

228 சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருவள்ளுவர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 228 சமையல் உதவியாளர் பணிக்கு பெண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளூவர் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு 228 சமையல் உதவியாளர் பணிக்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணிக்கு அடிப்படை ஊதியம் ரூ.900 தர ஊதியம் ரூ.200 வழங்கப்படும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25 சதவீத பணியிடங்கள் உள்ளன.21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் 20 - 40க்குள் இருக்க வேண்டும்.பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதோராக இருக்க வேண்டும்.பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 - 40க்குள் இருக்கவேண்டும். அனைத்து பிரிவினரும் 3 கி.மீட்டருக்குள் குடியிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை 30-ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி,நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இலவசமாக பெறலாம்.விண்ணப்பத்துடன் கல்வி, சாதி, இருப்பிடச் சான்று (2014 டிசம்பர் 31 முன்பெறப்பட்ட ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அட்டை),விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் சான்றுகள் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் விவரம்:
திருவள்ளூவர் - 13
எல்லாபுரம் - 16
கும்மிடிப்பூண்டி - 19
கடம்பத்தூர் - 11
மீஞ்சூர் - 15
பள்ளிப்பட்டு - 21
பூந்தமல்லி - 13
புழல் - 07
பூண்டி - 23
ஆர்.கே.பேட்டை - 15
சோழவரம் - 10
திருத்தணி - 18
திருவாலங்காடு - 15
வில்லிவாக்கம் - 26
ஆவடி - 05
திருவள்ளூவர் - 02
மொத்தம் - 228
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்