ஞாயிறு, 26 ஜூலை, 2015

தமிழக சட்டசபைக்கு டிசம்பரில் தேர்தல்? : 234 தொகுதிகளின் வரைபடம் அனுப்ப உத்தரவு -

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு ேம மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2015 மே மாதத்துடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இதையடுத்து அவர் பதவி இழந்தார். தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். இந்த நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த ஜெயலலிதா உட்பட 3 பேர் சுப்ரீம் கோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து கர்நாடகாவில் நடந்த மேல்முறையீட்டு வழக்கில் மே 11ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வராக மே கடைசி வாரத்தில் மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்றார். தமிழகத்தில் மதுக்கடையால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் 2016ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் திமுகவின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. மேலும் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் பூரண மதுவிலக்கு என்ற திமுகவின் அறிவிப்பால் அக் கட்சிக்கு வாக்கு சதவீதமும் உயர்ந்து வருவதாக உளவுத்துறை தகவல்கள் ஆளும் மேலிடத்திற்கு கிடைத்தன.

இதனால் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்கும் நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என தெரியவந்துள்ளது. அதன் எதிரொலியாக அதிமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களிடம் விளக்கி வருகின்றனர். ஒவ்வொரு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு 4, 5 மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் தனது பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்ேபாது அதிரடியாக கடந்த ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் தேர்தல் பணி வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளை போட்டோ எடுத்து உடனடியாக அனுப்ப அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளின் போட்டோக்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகள் மட்டுமின்றி வாக்குப்பதிவு மையங்களின் வரைபடத்தை தயார் செய்து உடனடியாக அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களின் வரைபடம் தயாரிக்கும் பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் அந்த வரைபடப் பணியின் அறிக்கை ஆட்டோ கேட் மூலம் தயார் செய்து தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2016 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணியை துரிதப்படுத்தியிருப்பது, தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காக அறிகுறியை காட்டுவதாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். டிசம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இரட்டைப்படை இலக்க ஆண்டில் தேர்தலை நடத்தினால் தனக்கு ராசியாக இருக்காது என்று ஜெயலலிதா கருதுவதால் முன் கூட்டியே தேர்தலை நடத்த அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு சிபாரிசு செய்வார் என்று யூகங்கள் உலா வந்தன. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையும் திருச்சியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சூசகமாக சுட்டிக் காட்டினார். - 
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்