வியாழன், 23 ஜூலை, 2015

அரசு இசைக் கல்லூரியில் ஓட்டுநர் பணி: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் ஓட்டுநர் பணியிடத்துக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை தமிழக அரசு இசைக் கல்லூரியில் காலியிடமாக உள்ள, ஒரு வாகன ஓட்டுநர் பணியிடம் இனசுழற்சி முறையில், ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்) பிரிவின் கீழ் தாற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.
இந்தப் பணியிடத்துக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும். மேலும், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன், 5 ஆண்டுகளுக்கு மேல் ஓட்டுநர் பணியில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 1, 2015 தேதியன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.5,200- ரூ.20,200 அகவிலைப்படி ரூ.2400 சேர்த்து ஊதியமாக வழங்கப்படும்.
இதற்கான கல்வித் தகுதியுடையோர், ஓட்டுநர் அனுபவம் உள்ளிட்ட விவரங்களை, உரிய சான்றுகளுடன், "முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சென்னை-28' என்ற முகவரிக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்