வியாழன், 23 ஜூலை, 2015

கோவை வேளாண்மைப் பல்கலை.யில் முதுநிலைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. இப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விரிவாக்கம், மண்ணியல், பூச்சியியல், வேளாண் பொறியியல் உள்ளிட்ட 33 முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 2015-16 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 3-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி இருந்தது. தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாளான ஜூலை 20-ஆம் தேதி வரையிலும் 1,684 மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.
இவர்களில் 540 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 28-ஆம் தேதி வெளியாகும். இதையடுத்து சேர்க்கை நடைமுறைகள் தொடங்கும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்