திங்கள், 20 ஜூலை, 2015

மதுரையில் 6 தொடக்கப் பள்ளிகளை மூட முடிவு: ஆசிரியர்கள் சங்கக் கருத்தரங்கில் கண்டனம்

-மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மதுரையில் 6 தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கு கல்வித் துறை முடிவு செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் மதுரை மூட்டா அரங்கத்தில் ‘பொது பள்ளிகளை வலுப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஜி.சி.மனோகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.அழகர்சாமி வரவேற்றார். கருத்தரங்கை கல்வி பாதுகாப்புக் குழு உறுப்பினர் பி.ராஜமாணிக்கம் தொடங்கி வைத்து பேசியதாவது:
பள்ளிகளில் கல்வித் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்துவதில்லை. அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் மாணவர்கள் இல்லை என்ற காரணத்தை கூறி அரசு பள்ளியை வேறு வேறு பள்ளிகளுடன் இணைப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் 20-க்கும் குறைவாக மாணவர்கள் இருப்பதால் ஆதிமூலம், திருவா ப்புடையார், பெரியபாலம், முனிச்சாலை, மேலவாசல், கட்ட பொம்மன்நகர் அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கு கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கல்வியாளர்களின் எதிர்ப்பு காரணமாக பள்ளிகளை மூடும் முடிவை செயல்படுத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர் என்றார்.
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதாவது: பள்ளி கல்வி அதிகாரிகள் ஆண்டுக்கு ஒரு முறை பள்ளியில் ஆய்வு நடத்த வேண்டும். பள்ளிகளின் ஆய்வக வசதி, கட்டமைப்பு வசதி, கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கல்விப்பணிகள், பள்ளியை மேம்படுத்தவதற்கான வழிகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். 3 ஆசிரியர்களுக்கு நூறு மாணவர்கள் இருக்க வேண்டும் என அதிகாரிகள் முடிவு செய்கின்றனர். அந்த அளவு மாணவர்கள் இல்லாவிட்டால் ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைத்துவிடுகின்றனர்.
இதனால் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து பள்ளியை மூடும் நிலைக்கு செல்கிறது. சென்னையில் ஏற்கெனவே 30 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் ஆங்கிலம், தமிழ் சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
கருத்தரங்கில், அரசு பள்ளிகள் மேம்பாட்டுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முக்கியத்துவம் வழங்க வேண்டும். மாணவர்கள் தமிழ்வழிக் கல்வியை தேர்வு செய்ய ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்களை நிர்வாக பணியில் ஈடுபடுத்தக் கூடாது என வலியுறுத்தினர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்