திங்கள், 20 ஜூலை, 2015

இனி சிம் கார்டுகளே இருக்காது; 'விர்ச்சுவல் சிம்'களை அறிமுகப்படுத்த ஆப்பிள், சாம்ஸங் நிறுவனங்கள் முயற்சி-

செல்போன்களில் நெட்வொர்க் சேவைகளை பெற இனி சிம் கார்டுகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள், சாம்ஸங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 'விர்ச்சுவல் சிம்'-களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றன. இந்த வகை 'e-SIM'-களின் மூலம் எளிதாக வாடிக்கையாளர்கள் வெவ்வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறிக் கொள்ளலாம். ஸ்மார்ட்போன்களின் இண்டர்பேஸ் ஸ்கிரீன் வழியாகவே சிம்மை ஆக்டிவேட் செய்துவிடலாம்.
இதுபோன்ற முயற்சியில் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் களமிறங்கிய ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த நெட்வொர்க் சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில், அதே சேவையை போல வி்ர்ச்சுவல் சிம்களை அனைத்து கருவிகளிலும் கொண்டு வர மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுசம்பந்தமாக ஏடி அண்ட் டி, டி-மொபைல், வோடபோன், ஆரஞ்ச், எடிசாலட், ஹட்சிசன் வாம்போவா, டெலிபோனிகா ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. 2016-ம் ஆண்டில் இந்த விர்ச்சுவல் சிம்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்