செவ்வாய், 21 ஜூலை, 2015

பி.எப்., அலுவலகத்தில் அதிகரிக்கும் காலியிடங்கள்

மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாகவுள்ளன. 'செட்டில்மென்ட்' மனுக்கள் மீதான நடவடிக்கை 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என ஊழியர் சங்கம் வலியுறுத்தியது.இம்மண்டல அலுவலகத்தின்கீழ் மதுரை உட்பட ஆறு வருவாய் மாவட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 'செட்டில்மென்ட்' கோரி உறுப்பினர்கள் வழங்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை 20 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் 75 சதவீத பணிச்சுமை அதிகரித்துஉள்ளது.
பி.எப்., ஊழியர் யூனியன் செயலாளர் விசுநாததாசன் மண்டல கமிஷனரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ள தாவது: மண்டல அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்ட 239 பணியிடங்களுக்கு 177 ஊழியர்கள் மட்டும் உள்ளனர். 82 பணியிடங்கள் காலியாகவுள்ளன. 12,393 தொழில் நிறுவனங்களை சேர்ந்த 19 லட்சத்து 99 ஆயிரத்து 197 ஊழியர்கள் பி.எப்., உறுப்பினர்களாகவுள்ளனர். 2014-15ல் 82 ஊழியர்களை கொண்டு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 641 செட்டில்மென்ட் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
௩ மாதங்களில் 47,582 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அலுவலக பணிகளை கம்ப்யூட்டர்மயமாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்