வியாழன், 23 ஜூலை, 2015

பள்ளிக்குள் தகராறு செய்த ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'


திருப்பூர் : திருப்பூர், 59வது வார்டில், ஆண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் சகாயராணியும், பட்டதாரி ஆசிரியர் முதலியப்பனும், கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், தெற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் அழகர்சாமி, பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது சகாயராணி, பள்ளிக்கு வெளியாட்கள் சிலரை அழைத்து வந்தார். உடனடியாக, போலீசார் வரவழைக்கப்பட்டதால், அந்நபர்கள் தப்பியோடி விட்டனர். இதுபற்றி விசாரணை நடத்திய முதன்மை கல்வி அலுவலர் முருகன், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தகராறில் ஈடுபட்ட சகாயராணி, முதலியப்பன் ஆகிய இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொ) சதாசிவம் கூறுகையில், ''சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இருவரிடமும் துறை ரீதியாக விசாரித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்