வியாழன், 23 ஜூலை, 2015

மொபைல் போனில் ஆபாச படம் : அரசு பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

திருப்பூர் : பள்ளி மாணவியரிடம், மொபைல் போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருப்பூர், முத்தணம்பாளையத்தில், ஊராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. ஆங்கில ஆசிரியர் சாமிதுரை, மாணவியரிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மொபைல் போனில் வைத்திருந்த ஆபாச படங்களை, 6ம் மற்றும் 7ம் வகுப்பு மாணவியரிடம் காட்டியுள்ளார்; வகுப்பறையில் நடனம் ஆடும்படியும் கூறியுள்ளார். மாணவியர், பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முடிவில், முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவுபடி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சதாசிவம், ஆசிரியர் சாமிதுரையை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.
தலைமை ஆசிரியை:திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி; கடந்தாண்டு, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள், காலணிகள் மற்றும் புத்தக பைகளை, மாணவ, மாணவியருக்கு வழங்கவில்லை.மதிய உணவு சாப்பிட்டதும், தட்டு, டிபன் பாக்சை கழுவி வைக்குமாறு மாணவியரிடம் கூறியதாகவும் புகார் எழுந்தது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியை ஸ்ரீதேவியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டனர்.இரு நாட்களுக்கு முன், ஆண்டிபாளையம் மாநகராட்சி பள்ளியில், மாணவர்கள் முன்னிலையில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்