-பாட்னாவில் ஆசிரியர் ஒருவருக்கு அகவிலைப்படி வழங்க லஞ்சம் கேட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ளது புல்பரஸ் கிராமம். இங்கு செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ராம்தேவ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் தேவ் கிருஷ்ணாவின் அகவிலைப்படியை விடுவிக்க ராம்தேவ் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியர் தேவ் கிருஷ்ணா இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுறையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை தலைமை ஆசிரியரிடம் தேவ் கிருஷ்ணா அளித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

0 comments:
கருத்துரையிடுக