திண்டுக்கல்: ஆசிரியர்களின் உயிர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வர தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
அதன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ண தாஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாச்சிமுத்து, அமல்ராஜ், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு பேசினார். மாவட்ட பொருளாளர் ராஜாக்கிளி நன்றி கூறினார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். பணிநிரவல் செய்த பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டங்களில் நியமிக்க வேண்டும். தகுதி தேர்வின்றி தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் உயிர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். பொதுமாறுதல் கவுன்சிலிங் விதிமுறையில் திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments:
கருத்துரையிடுக