வியாழன், 23 ஜூலை, 2015

எஸ்.எஸ்.சி., தேர்வுகாலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசின், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 6,578 பணியிடங்களுக்காக, எஸ்.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கு, விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,523 தபால் உதவியாளர்கள், 2,049 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், 1,006 லோயர் டிவிஷனல் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் - எஸ்.எஸ்.சி., கடந்த மாதம் வெளியிட்டது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல் 27 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள், வரும் நவம்பர் மாதம், 1, 15, 22 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளன. விருப்பம் உள்ளவர்கள்,
இணையதளத்தில், ஜூலை, 13க்குள், 'ஆன்-லைன்' முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சர்வரில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், விண்ணப்பித்தலுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது. தற்போதும், சர்வரில் பிரச்னை இருப்பதால், விண்ணப்பித்தலுக்கான காலக்கெடுவை, ஜூலை 24 ஆக, ஆணையம் நீட்டித்துள்ளது.இதன்படி, 24ம் தேதி மாலை, 5:00 மணி வரை, ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்