கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் நுழைவு வாயிலின் பெயர் பலகையில் இருந்த இரு பாலர் என்ற எழுத்தை அழிக்கும்படி பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி நேற்றுமுன்தினம் மாணவர்கள் சுமார் 20 அடி உயரத்தில் உள்ள பெயர் பலகையில் இருந்த இருபாலர் என்ற எழுத்தை அழித்தனர். கல்வி பயில பள்ளிக்கு செல்லும் மாணவர்களை ஆசிரியர்கள் 20 அடி உயரத்தில் ஆபத்தை உணராமல் ஏற வைத்து வேலை வாங்கிய இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ‘தமிழ்முரசு’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.இந்நிலையில் மாணவர்களை படிக்க விடாமல் வேலை வாங்கியதாக பள்ளியின் தலைமை ஆசிரியை வரலட்சுமியை மேல்நிலைப்பள்ளி கல்வித்துறை இயக்குனர் (சென்னை) கண்ணப்பன் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

0 comments:
கருத்துரையிடுக