ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மாரடைப்பு காரணமக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,82 , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.
திங்கள், 27 ஜூலை, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.


0 comments:
கருத்துரையிடுக