கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவகம் மூலம் அந்த ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அஞ்சலக சேமிப்புக்கணக்கு துவக்கப்பட்டு ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் பணம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.என்ன காரணத்தினாலோ பணம் பிடித்தம் செய்வது நிறுத்தப்பட்டு அஞ்சலக சேமிப்பு புத்தகம் உரியவர்களிடம் கொடுக்கப்பட்டு விட்டது.மேற்கண்ட அலுவலகத்தில் சிவக்குமார் என்ற ஆசிரியருக்கு அஞ்சலக சேமிப்புக்கணக்கு துவக்கப்பட்டு 2009 நவம்பர் முதல் மாத ஊதியத்தில் ரூ500 பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றது.திடீர் செலவால் சிவக்குமாருக்கு பணத்தேவை ஏற்படவே 2012 ஜூன் மாதம் ரூ7500 மட்டும் தனது இருப்புத்தொகையிலிருந்து எடுத்துக்கொண்டு அஞ்சலக சேமிப்புக்கணக்கு புத்தகத்தை அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுகின்றார்.உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அடையாளம் தெரியாத "மூளைக்கார"ஆசாமி போலி கையெழுத்தின் மூலம் அதே வருடம் (2012) நவம்பர் மாதம் சேமிப்புக்கணக்கில் உள்ள தொகையை முழுவதுமாக 11364 ரூபாய் பணத்தை எடுத்துவிட்டு கணக்கை முடித்து வைக்கின்றார்.அந்த அடையாளம் தெரியாத மூளைக்கார ஆசாமியே போலி கையெழுத்தின் மூலம் புது அஞ்சலக கணக்கை துவக்கி வைக்கின்றார்.புதிதாக துவக்கப்பட்ட சேமிப்புக்கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்படுகின்றது.இந்த சூழ்நிலையில் 2014 டிசம்பர் மாதம் ஆசிரியர்களின் சேமிப்பு கணக்கு புத்தகம் அவரவரிடம் ஒப்படைக்கப்படுகின்றது.ஒரே ஆசிரியருக்கு இரு வேறு எண்களில் பணம் பிடித்தம் செய்ய்படுகிறதே என்று சந்தேகப்பட்டு அஞ்சலகத்தில் கேட்கும் பொழுது அடையாளம் தெரியாத மூளைக்கார நபரின் கையாடல் தெரியவருகின்றது.குருவி போல் சேர்க்கும் பணத்தில் கூட பங்கு போட உங்களுக்கு எப்படிதான் மனது வருகின்றதோ!ஆசிரியர்களே உஷார் உஷார்...என் நிலைமை உங்களுக்கு வரவேண்டாம் விழிப்பாய் இருங்கள்.கையாடல் செய்த பணம் உரியவர் கைக்கு கிடைப்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.ஊதுற சங்கை ஊதி வைப்போம்-இனி ஆசிரியர் வாய்ஸ் சிவக்குமார் பிஸி..
சனி, 18 ஜூலை, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.
உண்மை
பதிலளிநீக்கு