'பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகலை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, அரசுத் தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த, பிளஸ் 2 உடனடி துணைத் தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை, இன்று காலை, 10:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க, Application for Retotalling/ Revaluation என்ற தலைப்பிலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும், 5 மற்றும் 6ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை, பணமாக செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக