திண்டுக்கல் வில்வாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் செ.காளிமுத்து, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
ஒட்டன்சத்திரம் அருகே பாறைவலசு கிராமத்தை சேர்ந்த காளிமுத்து, 1986ல் கப்பல்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின் 1987ல் அப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினார். பின் தீர்த்தாகவுண்டன் வலசு, கந்தப்பகவுண்டன் வலசு, கூத்தம்பூண்டி, அத்திமரவலசு உட்பட பல பள்ளிகளில் பணியாற்றினார். மாணவர்களின் கம்ப்யூட்டர் கல்விக்கு பெரிதும் உதவி செய்த இவர், ஓராசிரியர் பள்ளியை ஈராசிரியர் பள்ளியாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார். 2011 முதல் வில்வாதம்பட்டியில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். 2012ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இவர், தற்போது தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக