வியாழன், 13 ஆகஸ்ட், 2015

அடுத்த தலைமுறை மாணவர்களை சிறப்பாக உருவாக்குவேன்: தேசிய விருதுக்கு தேர்வான ஆசிரியர் உருக்கம்

திருச்சி: ""சிறந்த மாணவர்களை உருவாக்கும் பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு, என்ற அப்துல் கலாமின் உத்வேக வார்த்தைகளை நிறைவேற்றுவேன்,'' என, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிராசிஸ் சேவியர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஓரியூரை சேர்ந்த லாசர், சிசிலி தம்பதியரின் மகன் பிரான்சிஸ் சேவியர், 58. கடந்த, 1956ம் ஆண்டு, அக்., 5ம் தேதி பிறந்தார். ஓரியூர் கிராமத்தில் உள்ள செயிண்ட் அருளானந்தர் பள்ளியில், 11ம் வகுப்பு வரை படித்தேன். தொடர்ந்து, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில், பி.யு.சி.,யும், 1974- 77ம் ஆண்டு வரை, பி.எஸ்.சி., வேதியியல் படித்தார். இளைங்கலை பட்டம் பெற்றதும் சாமியார் ஆவதற்கான, 11 ஆண்டு படிப்பில் சேர்ந்து படித்தவர், சமூக சேவையில் ஈடுபடும் நோக்கில், மூன்றாண்டு சிறப்பு கல்வியையும் படித்தார். இதையடுத்து, 1989- 90ல், மாஞ்சோலையில் பணியாற்றியுள்ளார். பின் கல்விப்பணிக்கு வந்தவர், 1990- 2015ம் ஆண்டு வரை, பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். 1990-2001ம் ஆண்டு வரை, மதுரை செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில், முதுநிலை பட்டதாரி ஆசிரியராகவும், மூன்று ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், மூன்று ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியராகவும், ஏழு ஆண்டு தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த போது, தொடர்ந்து, எட்டு ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சியடைய செய்தார். பணியிட மாறுதலில், நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பணி புரிந்த போது, ஓய்வு பெற்றார். தற்போது, திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர் மேல்நிலைப்பள்ளி தாளாளராக உள்ளார். இவர், கடந்த, 2007ம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். கடந்த, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் சிறந்த கல்வியாளர் விருதுகளையும், அதே ஆண்டில், சர்வதேச கல்வியாளர் விருதும் பெற்றுள்ளார்.
பிரான்சிஸ் சேவியர் கூறியதாவது: தேசிய நல்லாசிரியர் விருது வழங்க தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமத்தில் பிறந்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பயின்ற கல்லூரியில் படித்து, பள்ளியில் தலைமை ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டதற்காக, விருது கிடைக்க உள்ளது. "அடுத்த தலைமுறையை உருவாக்கும் போது, ஊழல் இல்லாத, மதிப்பீட்டை பின்பற்றி நடக்கும் மாணவர்களை உருவாக்கினால், 2020ல் இந்தியா வல்லரசாக மாறும். அத்தகைய மாணவர்களை உருவாக்கும் பங்கு, ஆசிரியர்களுக்கு உண்டு' என, அப்துல் காலம் கூறியுள்ளார். அந்த வகையில், மதிப்பீடு மிக்க மாணவர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்