புதன், 19 ஆகஸ்ட், 2015

பள்ளிகளில் முறையான ஆசிரியர் இல்லாமல் யோகா பயிற்சி

சின்னாளபட்டியில் முறையான ஆசிரியர் இல்லாமல் யோகா பயிற்சி வழங்கப்படுவதால் மாணவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு தினசரி யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது.
உடல்மற்றும் மனரீதியான புத்துணர்வு பெறுவதற்கு, யோகா பயிற்சி உதவும் என்பதால் இது வரவேற்கத்தக்கது. ஆயினும், அனுபவம் உள்ள முறையான ஆசிரியர் மூலம் பயிற்சி வழங்கப்பட்டால்தான் மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது பள்ளிகளில் இவ்வாறு யோகாவிற்கென தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக,வெளியிடங்களில் யோக பயின்று வரும் மாணவிகள் ஒருசிலர், பள்ளியில் "யோகா மாஸ்டராக&'செயல்படுவதாகவும், இதனால் மோசமான பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
யோகாசன ஆசிரியர் ஒருவர் கூறும்போது, சரியான முறையில் யோகாசனம் செய்வது மிகுந்த நன்மை தரும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் குறிப்பிட்ட சில ஆசனங்களை தவறான முறையில் செய்தால், மனம் மற்றும் உடல் ரீதியாக கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை,என்றார்.
எனவே, பள்ளி நிர்வாகங்கள் முறையான அனுபவம் உள்ள ஆசிரியர்களை நியமனம் செய்து, யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்