சனி, 8 ஆகஸ்ட், 2015

அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்


ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே மழவராயநல்லூர் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இதை அறிந்த 50–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் வெற்றிவேந்தன் தலைமையில் பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கு திடீரென விடுமுறை விடப்பட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தாசில்தார் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் அருள்பிரகாசம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேவையில்லாமல் கிராம பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்காக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதாக தெரிகிறது.
பரபரப்பு
இது கண்டிக்கத்தக்கதாகும். எனவே பள்ளிக்கு விடுமுறை அளித்த சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பள்ளிக்கு விடுமுறை அளித்தது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து உள்ளூர் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் 30 –க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் நடத்தினர். இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்