பி.காம்.,சீட்டுக்கு பேரம் பேசியது தொடர்பான புகாரில், கல்லுாரி கல்வி இயக்குனரிடம், சென்னை, அம்பேத்கர் அரசு கல்லுாரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, வியாசர்பாடியிலுள்ள,
அம்பேத்கர் அரசு கலை கல்லுாரியில், பி.காம்., சீட் வழங்குவதற்கு, மாணவனிடம், 15 ஆயிரம் ரூபாய் பேரம் பேசியதாக, உயர்கல்வித் துறைக்கு புகார் வந்தது.
சென்னை, வியாசர்பாடியிலுள்ள,
அம்பேத்கர் அரசு கலை கல்லுாரியில், பி.காம்., சீட் வழங்குவதற்கு, மாணவனிடம், 15 ஆயிரம் ரூபாய் பேரம் பேசியதாக, உயர்கல்வித் துறைக்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து, துறை ரீதியான விசாரணைக்கு, உயர்கல்வி முதன்மைச் செயலர் அபூர்வா உத்தரவிட்டார். சென்னை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கன்னிகா, கல்லுாரியில் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நவமணி, நேற்று, கல்லுாரி கல்வி இயக்குனர் சேகரிடம், எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:
கருத்துரையிடுக