உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பில் சேர, செப்., 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இக்கல்லுாரியில் சேர நுழைவுத் தேர்வு
எழுதும் மாணவர்களுக்கு, 2016ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி, பதினொன்றரை வயதுக்கு குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும்.
எழுதும் மாணவர்களுக்கு, 2016ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி, பதினொன்றரை வயதுக்கு குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும்.
2016ம் ஆண்டு கல்லுாரியில் சேரும்போது, ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
ராணுவம், துணை ராணுவம் மற்றும் மத்திய அரசில் பணிபுரிபவராக இருந்தால், அவர்கள் குடியுரிமை பெற்ற மாநிலத்திலேயே, விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வுவிண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, 1.12.2015 அன்று காலை 10:00 மணி முதல் 12:00 வரை ஆங்கிலத் தேர்வு, மாலை 2:00 மணி முதல் 3:30 வரை கணிதம், 2.12.20015 காலை 10:00 மணி முதல் 11:00 வரை பொது அறிவு தேர்வு நடைபெறும். தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, நேர்முகத் தேர்வு 5.02.2016 அன்று நடத்தப்படும்.
தேர்வு மையம்
தேர்வு மையம் குறித்து, இணை இயக்குநர் அலுவலக தேர்வு பிரிவால் அஞ்சல் வழி மூலம் அறிவிக்கப்படும். விண்ணப்பங்கள் பெறுதல்விண்ணப்பப் படிவத்தை பதிவு அஞ்சல் மற்றும் விரைவு அஞ்சல் மூலம் பெறுவதற்கு, முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன், The commandant, Rashtriya Indian Military college, Dihradun என்ற பெயரில் கட்டணம் செலுத்தி, பெற்றுக்கொள்ளலாம்.
உத்தரகண்ட் ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வகையில், பொதுப்பிரிவினர் ரூ. 430 ( பதிவு அஞ்சல்), ரூ. 480 (விரைவு அஞ்சல்), அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குயினர் ரூ. 385 (பதிவு அஞ்சல்) ரூ. 435 (விரைவு அஞ்சல்) தொகைக்கு கேட்பு வரைவோலை மூலம் கட்டணம் செலுத்தி, The commandant, Rashtriya Indian military college, dehradun cantonment, Uttaranchl 248 003. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் செப்., 30ம் தேதிக்குள், இணை இயக்குநர், இரண்டாம் தளம், அ-அடுக்ககம், பெருந்தலைவர் காமராஜர் நுாற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி 605 005.என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக