அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.இ.ஒ., அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை தனியார் மேல்நிலை பள்ளி 10 ம் வகுப்பு மாணவன் காளிதாஸ்,15. கடந்த 10 ல் வீட்டு பாடம் எழுதி வரவில்லையென கூறி முள் குச்சியால் தலைமை ஆசிரியர் அடித்ததால் காயம் ஏற்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலைமை ஆசிரியர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் சங்கரநாராயணனும் விசாரணை செய்தார். இந்நிலையில் நேற்று அப்பள்ளி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் , இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.இ.ஒ., அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
சங்கரநாராயணன் கூறுகையில், சம்பவம் நடந்த அன்றிலிருந்து என்னை பார்க்க தலைமை ஆசிரியர் வரவில்லை. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். எந்த வித பதிலும் தரவில்லை,என்றார்.இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ரஞ்சித், மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மீது கல்வி துறை, போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை இல்லையென்றால் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும்,என்றார்.

0 comments:
கருத்துரையிடுக