சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தங்கம் வென்றார்.
இந்த போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உசேன் போல்ட் 9.79 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
ஜஸ்டின் காட்லீன் அரையிறுதி போட்டியில் 9.77 வினாடிகளில் வெற்றி பெற்றிருந்தார். இறுதிப் போட்டியிலும், முதல் 50 மீட்டர் தொலைவுக்கு இருவரும் சமமாகத்தான் வந்து கொண்டிருந்தனர்.
ஆனால் கடைசி 30 மீட்டர் தொலைவில் உசேன் போல்ட் அபாரமாக ஓடி முதலிடத்தை வென்று விட்டார்.ஜஸ்டின் காட்லீன் 9.80 வினாடிகளில் 100 மீட்டர் தொலைவை கடந்து வெள்ளி பதக்கத்தோடு திருப்தி படவேண்டியதாகி விட்டது. உலகத் தடகளத்தில் உசேன்போல்ட் வெல்லும் 3வது பட்டம் இதுவாகும். இதற்கு முன் அமெரிக்க வீரர்கள் கார்ல் லூயீஸ், மவுரீஸ் கிரீன் ஆகியோர் இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக