நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...:ஸ்டாலின்
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், வரும் சட்டசபை தேர்தலில் திமுக.,வை ஆட்சியில் அமர்த்தினால் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தொடக்க கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை தாய்மொழியான தமிழ் வழி கல்வி நடைமுறைப்படுத்தப்படும். பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் பணியில் சமூக விரோதிகள் தலையீடு அதிகமாக உள்ளது. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக