திங்கள், 10 ஆகஸ்ட், 2015

TNPTF - ன் மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டத் தகவல்


🌟TNPTF - ன் மாநில சிறப்பு பொதுக் குழுக்  கூட்டத் தகவல்🌟
👉 09.08. 2015 ஞாயிற்றுக்கிழமை கூடுவாஞ்சேரி GRK திருமண மண்டபத்தில் நடந்த, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
TNPTF-ன் மாநில சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  
👉சுமார் 750 பேர் கலந்து கொண்டனர்.
👉புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி 02.09.2015 அன்று இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் (Strike) செய்ய இருக்கின்றன.
👉அஞ்சல் துறை மற்றும்  பொதுத் துறைகளும்  கலந்துகொள்கின்றன.
👉வங்கிகளும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
👉 நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
👉 நாடு முழுவதும் அனைத்து  மாநிலங்களிலும் STFl-ல் அங்கம்  வகிக்கும்  அனைத்து  ஆசிரியர் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன.
👉தமிழ்நாட்டில் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்  சங்கங்கள் STFI -ல் அங்கம் வகிக்கின்றன. அவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
👉நம்முடைய TNPTF - ம்
STFI-ல் அங்கம் வகிக்கிறது.
,
👉எனவே தமிழகம் முழுவதும்
TNPTF - ன் 35,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
👉போராட்டத்திற்கு தயாராக
இருங்கள்
👉நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள் பற்றி வட்டார செயற்குழுவில் விளக்கப்படும்..
(குறிப்பு :  STFI - School Teachers Federation of India - இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு )
நன்றி: திரு.ரஞ்சன் தயாள தாஸ்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்