வியாழன், 17 செப்டம்பர், 2015

ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக 10 புதிய விடுதிகள்


ஆதிதிராவிடர், பழங்குடியின கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக 10 புதிய விடுதிகள் தொடங்கப்படும் என்று, அந்தத் துறையின் அமைச்சர் என்.சுப்பிரமணியன் அறிவித்தார்.
 சட்டப்பேரவையில் புதன்கிழமை ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் என்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகள்:

 2012-இல் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சுயநிதிக் கல்லூரியிலும் இலவசக் கல்வி என்ற திட்டத்தினால் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
 இந்த மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி பயில, 10 புதிய கல்லூரி விடுதிகள் துவங்கப்படும். சென்னையில் முதுகலை மாணவியர் விடுதியும், ஆராய்ச்சி மாணவியர் விடுதியும் அமைக்கப்படும்.
 திருநெல்வேலியில் சோலைச்சேரியிலும், நாமக்கல்லில் ராசிபுரத்திலும், திருவண்ணாமலையில் செய்யாறிலும், திண்டுக்கல்லில் நிலக்கோட்டையிலும், திருவாரூரில் நன்னிலத்திலும், தருமபுரியில் காரிமங்கலத்திலும் கல்லூரி மாணவியர் விடுதிகள் துவங்கப்படும்.
 கிருஷ்ணகிரியிலும், புதுக்கோட்டையில் புதுப்பட்டியிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவியர் விடுதிகள் துவங்கப்படும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவர்கள் வருமானம் ஈட்டும் வண்ணம், சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளில் விலையில்லா எம்பராய்டரி தையல் இயந்திரங்கள் ரூ.1 கோடி செலவில் வாங்கி, பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
 பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு...
 பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக 10 புதிய விடுதிகள் ஏற்படுத்தப்படும் என்று, அந்தத் துறையின் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் அறிவித்தார்.
 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் வெளியிட்ட அறிவிப்புகள்:
 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக 5 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 3 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், ஒரு சீர்மரபினர் நல விடுதி, ஒரு சிறுபான்மையினர் நல விடுதி என மொத்தம் 10 புதிய கல்லூரி விடுதிகள், 1,000 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ. 2.82 கோடி செலவில் துவங்கப்படும்.
 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் நல விடுதிகளில் மின் பழுது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் ரூ. 2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்