செவ்வாய், 8 செப்டம்பர், 2015

மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற 11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வியில் சிறந்து விளங்கும் கல்வியை தொடர வசதி இல்லாத சிறுபான்மையின மாணவியர் களுக்கு உதவும் வகையில் மவு லானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் மூலம், தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்த வர், சீக்கியர், புத்தமதத்தினர், ஜெயின் மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்த 11 - ம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகையாக தலா ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 1,707 சிறுபான்மையின மாணவியர் களுக்காக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள இந்த கல்வி உதவி தொகையை பெற விரும்பும் மாணவியர்கள், 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப் பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் நடப்பு கல்வியாண்டில் மத்திய- மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11- ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இணைய முகவரி விண்ணப்ப படிவம் மற்றும் நடப்புக் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்ட மாணவியர்கள் விவரங்கள் உள்ளிட்டவை www.maef.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் சிறுபான்மையின மாணவியர்கள் மேற்கண்ட இணைய தளத்திலி ருந்து, விண்ணப்ப படிவத்தை பதி விறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பத்துடன் வருமானச் சான்றி தழ், உறுதி ஆவணம் உள்ளிட்ட வைகளை இணைத்து, தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்