செவ்வாய், 8 செப்டம்பர், 2015

தொடக்கக்கல்வி இயக்கநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு


தொடக்கக்கல்வி இயக்கநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
இன்று(7.9.15) தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு.இளங்கோவன் அவர்களை மாநிலப்பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
1. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. நமது கோரிக்கையின் சமூக நோக்கத்தை பாராட்டியதோடு உடனடியாக பிரிவு அலுவலரை வரவழைத்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
2. மாவட்ட மாறுதலுக்கு பின்னால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் எஸ்.எஸ்.ஏ அல்லாத நடுநிலைப்பள்ளிகளுக்கு மூன்றாவது பட்டதாரி பணியிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. டிசம்பருக்குள் மீண்டும் ஒரு பதவி உயர்வு அளிக்க உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளார்கள்.
3. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றியம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கா.ஜான்சிராணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
4. கலந்தாய்வில் மாறுதல் பெற்று விடுவிக்கப்படாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு உரிய வழி காட்டுதல் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
5. உபரி பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு மனமொத்த மாறுதலில் செல்ல ஓராண்டு நிபந்தனையிலிருந்து தளர்வு செய்து மாறுதல் அனுமதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
6. தற்பொழுது நடந்த முடிந்த பொது மாறுதல் கலந்தாய்வில் நிர்வாக மாறுதல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை மறுக்கப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
7. காஞசிபுரம் மாவட்டத்தில் இளநிலை பணியிலிருந்து இடைநிலை பதவி உயர்வு வழங்கியமைக்கு தேர்ச்சி பெற்ற நாளிலிருந்து ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டது.
8. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியத்தில் கடந்தாண்டு பணி நிரவலில் சென்ற ஆசிரியைக்கு காலியாக உள்ள இடைநிலையாசிரியர் பணியிடத்தை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
9. காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், நெற்குணம் நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
10. இந்தாண்டு பணி நிரவலில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் மறுக்கப்பட்டது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. அதை சரி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளை கவனமுடன் உள்வாங்கிய இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்