மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு இன்று நடக்கிறது. 89 பணியிடத்துக்கு 12,149 பேர் தேர்வு எழுதுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மகப்பேறு மற்றும் குழந்தை நல சுகாதார அலுவலர் பதவியில் 89 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.
விண்ணப்பிக்க பி.எஸ்சி நர்சிங் அல்லது பிஎஸ்சி (பப்ளிக் ஹெல்த் நர்சிங்) கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு சுமார் 12,419 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்து ேதர்வு இன்று நடக்கிறது. சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் 40 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் 21 பள்ளிக்கூடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக