ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பப் போட்டி

பள்ளி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்ப போட்டி நடைபெறுகிறது. சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.

இதில், கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புக்கான மாதிரியுடன் தனியாகவோ, குறைந்தபட்சம் மூன்று நபர்கள் கொண்ட குழுவாகவோ இணைந்து பங்கேற்கலாம்.

இதில் தேர்வு செய்யப்படும் மூன்று சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.75 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறவர்கள் பள்ளி, கல்லூரி முதல்வர் அனுமதியுடன் பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 10-ஆம் தேதியாகும். மேலும் விவரங்கள் அறிய 94442 06191, 98402 79575, 044-22759200, 22750007 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்