செவ்வாய், 22 செப்டம்பர், 2015

அரசுப் பள்ளி ஆசிரியர், பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டங்கள்: 26 இல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, குழித்துறை கல்வி மாவட்டம், தக்கலை கல்வி மாவட்டம், நாகர்கோவில் கல்வி மாவட்டம் ஆகியவற்றுக்கு தனித்தனியே குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதன்படி, நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் செப். 26 ஆம் தேதி முதல் அக்.3 ஆம் தேதி வரை குறைதீர் சிறப்பு கூட்டமர்வு நடைபெறுகிறது. குழித்துறை கல்வி மாவட்டத்துக்கு செப். 26, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெறும். தக்கலை கல்வி மாவட்டத்துக்கு செப்.29, 30 தேதிகளிலும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு அக்.1, 3 ஆகிய தேதிகளில் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டங்களில் பங்கேற்க விரும்பும் அந்தந்த கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் அவரவர் மாவட்டக் கல்வி அலுவலரிடம் வரும் 25 ஆம் தேதிக்குள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்