செவ்வாய், 22 செப்டம்பர், 2015

ஆண்டிமடத்தில் உதவிதொடக்ககல்வி அலுவலகத்தை பெற்றோர்கள் முற்றுகை


ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய (விளந்தை மேற்கு) தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக ரத்தின.லூர்துசாமி பணிபுரிந்து வந்தார். இவர் சில காரணங்களினால் சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து லூர்துசாமி பணியிடை நீக்கத்திற்கு காரணமான அதே பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அப்பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள், பெற்றோர்–ஆசிரியர் கழக தலைவர் மற்றும் கிராம கல்விகுழுவினர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரியின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. உடனடியாக லூர்துசாமி பணியிடை நீக்கத்திறகு காரணமான உதவி ஆசிரியரை தேவனூர் தொடக்கபள்ளிக்கு மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதையடுத்து அங்கிருந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்