அரியலூர்: அரியலூர் அருகே, பள்ளி மாணவ, மாணவியரிடம், 500 ரூபாய் வசூல் செய்து, தனியார் கடையில் சீருடை வாங்கி கொடுத்த தலைமை ஆசிரியர் ஒருவரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே விளந்தை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் லூர்துசாமி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய சீருடையை இவர் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்துவிட்டு, மாணவ, மாணவிகளிடம் சீருடைக்காக, 500 ரூபாய் வசூல் செய்து தனியார் கடைகளில் சீருடைகளை வாங்கி கொடுத்துள்ளார். இது குறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் அரியலூர் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் சின்னதுரையிடம் புகார் செய்தனர். புகார் உண்மை என தெரியவந்ததையடுத்து, தலைமை ஆசிரியர் லூர்துசாமியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சின்னதுரை நேற்று உத்தரவிட்டார்.

0 comments:
கருத்துரையிடுக