கடலுார்: கடலுார் மாவட்டத்தில், பணி மூப்பு அடிப்படையில் 5 தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்களில் பணி மூப்பு அடிப்படையில் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதில், கடலுார் மாவட்டத்தில், 5 தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று பிற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாவட்டத்தில், பெரியக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், மயிலாடுதுறைக்கும், பாலுார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானம் உடையார்பாளையத்திற்கும், பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகி நாகை மாவட்டத்திற்கும், கண்டரக்கோட்டை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கும், வடகரை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜம்புலிங்கம், சென்னை சுற்றுச்சூழல் இணை இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
நாகப்பட்டிணம் மாவட்டக் கல்வி அலுவலர் குமாரசாமி, கடலுார் கல்வி மாவட்ட அலுவலராகவும், கரூர் கல்வி மாவட்ட அலுவலர் தட்சணாமூர்த்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக