அரசு நகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத் தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்தக் கழகத்தின் மாநிலச் செயற்குழு, மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் இந்தக் கழகத்தின் மாநிலச் செயற்குழு, மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் பேசுதல், கேட்டல் திறன் முழுமையாக வெளிப்படவும், தாய்மொழியான தமிழ்ப் பாடத்தில் முழுமையான தேர்ச்சி பெறவும், அரசுப் பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வி நலம் வேண்டி தமிழ் இரண்டாம் தாளில் அக மதிப்பீடாக 20 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். தாய்மொழியான தமிழ்ப் பாடத்தைப் பழைய முறைப்படி முதல் பாடமாக வைத்து தமிழக அரசு திருத்த ஆணை வழங்க வேண்டும். மத்திய அரசு ஜூலை முதல் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப் படியை 6% உயர்த்தி வழங்கியது போல, தமிழக அரசும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் 6% அகவிலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை தமிழ் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்குப் பட்டதாரி தமிழாசிரியர் தொகுப்பில் இருந்து முதுகலை தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் சா. மருதவாணன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் இரா. கோவிந்தன், சிறப்புத் தலைவர் ஆறுமுகம், பொதுச் செயலர் சு. நாகேந்திரன், மாவட்டத் தலைவர் து. கலியமூர்த்தி, செயலர் முத்தழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments:
கருத்துரையிடுக