5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருமானவரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 8–ந்தேதி வேலைநிறுத்தம் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு:
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருமானவரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வருகிற 8–ந்தேதி வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக, கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
காலிப்பணியிடங்கள்
வருமானவரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்மேளன கூட்டு நடவடிக்கைக்குழு பொறுப்பாளர்கள் எம்.எஸ்.வெங்கடேசன், ஜி.கண்ணன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
வருமானவரித்துறை அலுவலகங்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாமல் இருக்கின்றன. இதை உடனே செய்து தர வேண்டும். மேலும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மத்திய அரசு உடனடியாக அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருமானவரித்துறை அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் தினக்கூலி, கேசுவல் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு 2 ஆண்டுகள் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதையும் உடனே வழங்க வேண்டும்.
5 அம்ச கோரிக்கைகள்
வருமானவரித்துறையில் பல்வேறு பதவிகளுக்கு வேலை நியமன விதிகள் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் தான் உள்ளது. இதனால் நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்காமலும், காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலையும் நீடித்து கொண்டு இருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகளாக உதவி ஆணையர் பதவி வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும் போன்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம்.
ஆனால் இதுவரை அரசும், நிர்வாகமும் செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அடுத்த மாதம் (அக்டோபர்) 1–ந்தேதி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, பிற்பகல் 2 மணிக்கு மேல் அரைநாள் வெளிநடப்பு போராட்டம் செய்ய இருக்கிறோம்.
8–ந்தேதி வேலைநிறுத்தம்
இந்த போராட்டத்துக்கு பிறகும், எந்தவித முன்னேற்றம் இல்லை என்றால், அடுத்த மாதம் (அக்டோபர்) 8–ந்தேதி கூடுதல் கமிஷனர் உள்பட வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.
இதையடுத்தும், எங்கள் கோரிக்கைகளுக்கு அரசும், நிர்வாகமும் அலட்சியம் காட்டினால், டெல்லியில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம். இதுபோன்ற போராட்டங்களால், இந்த ஆண்டின் வரிவசூல் செய்யும் இலக்கு பாதிக்கப்படும்.
எங்களுடைய போராட்டங்களுக்கு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் முழு ஆதரவு அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

0 comments:
கருத்துரையிடுக