வெள்ளி, 25 செப்டம்பர், 2015

தமிழகம் முழுவதும் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு : ஆசிரியர்கள் கலக்கம்

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதனால், ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல் 5ம் வகுப்பு வரை 1:30, 6 முதல் 8ம் வகுப்பு வரை 1:35 என்ற  ஆசிரியர் - மாணவர் விகிதத்தில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. இவற்றில், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது தெரியவந்துள்ளது.  அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாதந்தோறும் பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால்  அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளை போன்று உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி  வருகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதனால் ஆசிரியர் பணியிடம் உபரி அதிகரித்து கொண்டே  வருகிறது. அரசு பள்ளியில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் கவுன்சலிங் மூலம் மாற்றப் படுகின்றனர்.

ஆனால், உதவி பெறும் பள்ளிகளில் பணி மாறுதல் பல ஆண்டுக்கும் மேல் நடத்தப் படாமல் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும் நேற்றும் உதவி கல்வி  அலுவலர், வட்டார வளமைய அலுவலர் ஆகியோர் தலைமையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில்  இருக்கும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வதற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், சில அரசு பள்ளிகளிலும் இந்த ஆய்வு  நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு செல்லும் இந்த அதிகாரிகள், வகுப்புகளில் இருக்கும் மாணவர்களை எண்ணுவதுடன், அசிரியர்கள்  எண்ணிக்கை மற்றும் தேவைக்கு அதிகமாக உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வு  அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பல ஆண்டுகளாக பணிமாறுதல் இல்லாமல் பணியாற்றிய உபரி ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் மாணவர் விகிதம்


அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் 60 மாணவர்கள் இருந்தால் 2 ஆசிரியர், 61 முதல் 90 வரை மூன்று, 91 முதல்  120 வரை 4, 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்கள், அதன்பிறகு ஒவ்வொரு 50 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் ஆசிரியர் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்