ஈரோடு: கணித உபகரண பெட்டி பயன்பாடு குறித்த பயிற்சி கூட்டம், ஈரோட்டில் நடந்தது. கணித உபகரண பெட்டி பயன்பாடு மற்றும் கற்றலை வலுபடுத்தும் பயிற்சி, ஈரோடு வட்டார வள மையம் சார்பில், சித்தோடு, பி.பெ அக்ரஹாரம், கச்சேரி வீதி, எஸ்.கே.சி., ரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளி ஆகிய, நான்கு மையங்களில், நேற்று துவங்கியது. இன்று மற்றும், 14ம் தேதியும் இப்பயிற்சி தொடர்கிறது. மொத்தம், 160 ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர். ஈரோடு எஸ்.கே.சி., ரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளியில், 40 ஆசிரியர்களுக்கு பயிற்சி துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு கணித உபகரண பெட்டியை வழங்கி வருகிறது. எண் கட்டை, கூட்டல் பலகை, ஸ்பிண்டல் பலகை, பெருக்கல் பலகை உள்ளிட்ட, 22 பொருட்கள் இருக்கும். ஒன்று முதல் 4ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் கணித பாடத்தை எளிதில் கற்கும் வகையில், இப்பொருட்கள் வழங்கப்படுகிறது எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆசிரியர் பயிற்றுனர் சாமுண்டீஸ்வரி, அசோகபுரம் பள்ளியை சேர்ந்த மேகலா ஆகியோர், கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர். கணித பாடத்தை பள்ளி மாணவ, மாணவியர், அவர்களாகவே புரிந்து கொண்டு, கணக்குகளை போடும் வகையில், இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக