வியாழன், 24 செப்டம்பர், 2015

அரசு செவிசாய்க்குமா?


தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல்
தனித் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கிட வேண்டும்.***

# 60 மாணவர்கள்
11-12 வகுப்பில் படித்தால் கூட 9 ஆசிரியர் +

1 தலைமை ஆசிரியர்
மாநில அரசு நிதியில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

# 30 மாணவர்கள்
9-10 வகுப்பில் படித்தால் கூட 5 ஆசிரியர்
மத்திய அரசு நிதியிலும்

1 தலைமை ஆசிரியர்
மாநில அரசு நிதியிலும் நியமனம் செய்யப்படுகின்றனர்.

# 20 மாணவர்கள்
6-8 வகுப்பில் படித்தால் கூட 3 ஆசிரியர்.
மத்திய அரசு நிதியிலும்

1 தலைமை ஆசிரியர்
மாநில அரசு நிதியிலும் நியமனம் செய்யப்படுகின்றனர்.

# 6-8 வகுப்பில்
100 மாணவர்கள் பயின்றால்
3 பகுதி நேர ஆசிரியர்கள் மத்திய அரசு நிதியில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

# தொடக்கப் பள்ளிகளில்
60 மாணவர்கள்
வரை படித்தால்
2 ஆசிரியர் பணியிடம்
மத்திய அரசு நிதியில் தரப்படுகிறது.

எனவே மேற்கண்ட வழிமுறைப் படி, பார்த்தால்
1 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மாநில அரசு நிதியில் நியமனம்
செய்யப்பட வேண்டும்.

ஆனால் தொடக்கப் பள்ளிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் 2 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்குப் பதிலாக,

1 ஆசிரியர்+ 1 தலைமை ஆசிரியர் பணியிடமாக மாற்றி மாநில அரசு வழங்குகிறது.

# இவற்றையெல்லாம் எடுத்துக் கூறி
தொடக்கப் பள்ளிகட்கு
2 இடைநிலை ஆசிரியர் ( மத்திய அரசு நிதி ) மற்றும்

1 தலைமை ஆசிரியர் (மாநில அரசு நிதி ) மூலம் நியமனம் செய்ய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

# தொடக்கப் பள்ளிகளில்
தனி தலைமை ஆசிரியர் பணியிடம் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இடைநிலை ஆசிரியர்கள் பி.எட்., முடிக்காமல்
எம்.ஏ., தமிழ் முடித்தால் முதல் ஊக்க ஊதியம்
வழங்கிட வேண்டும்.***

#D.T.Ed., B.Lit.,
முடித்த
தமிழாசிரியர்

பி.எட்., முடிக்காமல்
எம்.ஏ., (தமிழ்) முடித்தால் முதல் ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.

#ஆனால்
D.T.Ed., B.Lit.,
முடித்த
இடைநிலை ஆசிரியர்
பி.எட்., முடிக்காமல்
எம்.ஏ., (தமிழ்) முடித்தால் முதல் ஊக்க ஊதியம் வழங்கப்படுவதில்லை.

#எனவே
இடைநிலை ஆசிரியர்கள் பி.எட்., முடிக்காமல்
எம்ஏ., (தமிழ்) முடித்தால் முதல் ஊக்க ஊதியம் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் பெயர்கள் அரசுப் பள்ளிகள்
என பெயர் மாறுவது எப்போது...?***

#ஊராட்சி ஒன்றியத்தின் வசம் இருந்த தொடக்க ,நடுநிலைப் பள்ளிகள் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்து சுமார் 35 ஆண்டுகள் ஆகின்றன.

ஆனாலும் இன்னமும்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை.

#இக்கோரிக்கை நிதிச்சுமை சாராத கோரிக்கை

எனவே
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளை அரசுப் பள்ளிகள்
என பெயர் மாற்றம்
செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் நியமனம் செய்வது எப்போது...? ***

# 60 மாணவர்கள் உள்ள
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூட துப்புரவாளர்
மாநில அரசு நிதியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

# ஆனால்
60 க்கும் அதிக மாணவர்கள் உள்ள அரசு தொடக்க ,நடுநிலைப் பள்ளிகளில் கூட துப்புரவாளர்
இதுவரை நியமனம் செய்யப்படவில்லை.

# மாணவர்கள் சுத்தமாகவும், சுகாதாராமாகவும் இருக்க வேண்டும் என்று கூறினால் மட்டும் போதுமா...?

அவர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க பள்ளிகளுக்கு துப்புரவாளர் நியமிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.

# பள்ளிகளுக்கு 14 வகையான இலவசத் திட்டங்களை,
இலவசப் பொருட்களை
பல கோடியில் வழங்கும் அரசு....

சில கோடியில் துப்புரவாளர் நியமிக்கலாமே...!

# அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய துப்புரவாளர் நியமிக்கப்படாததும் ஒரு காரணம் ஆகும்.

# ஏழை,எளிய
மாணவச் செல்வங்கள் படிக்கும் அரசு தொடக்க,
நடுநிலைப் பள்ளிகட்கு துப்புரவாளர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.2014-2015 ம் ஆண்டிற்குரிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் விதி எண்.110 ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு. *****

# பள்ளிகளின் கழிவறைகளை பராமரிக்க சுமார் ரூ.166 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

# எனவே தொடக்க,
நடுநிலைப் பள்ளிகட்கு விரைவில் துப்புரவாளர் நியமிக்க வேண்டும். .
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்