தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் - மாணவர்களுக்கு போட்டி
திண்டுக்கல்:தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அக்.15, 16ம் தேதிகளில் மாநில அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்த வேண்டும். போட்டிக்கான தலைப்பை அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையினர் ஏற்பாடு செய்து அறிவிக்க வேண்டும். போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறையினர் செய்து வருகின்றனர்

0 comments:
கருத்துரையிடுக