சிறப்பு குழந்தைகள் கல்விக்கான ஆசிரியர் விருது
கஸ்தூரி தேவராஜ்
ஆபர்சூனிட்டி ஸ்கூல், சென்னை
கஸ்தூரி தேவராஜ்
ஆபர்சூனிட்டி ஸ்கூல், சென்னை
எண்பது வயதான இவர், தனது இருபத்தி ஓராவது வயதில் ஆசிரியையாக சேர்ந்தார். இருபது வருட ஆசிரியர் பணிக்கு பிறகு அமெரிக்கா பாஸ்டனில் வீல்லாக் கல்லூரியில் ’எம்.எஸ்’ படிக்க சென்றார். திரும்பி வந்தவர் மூன்றில் இருந்து ஆறுவயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதில் நாட்டம் காட்டினார். புதிய வழிமுறைகள் மூலமும் செயல்முறைகள் மூலமும் தேசியளவில் அங்கீகாரம் பெற்றார். 1978ல் மனநலம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவ ஆரம்பித்தார்.நல்ல உள்ளங்களைச் சந்தித்து ஆபர்சூனிட்டி பள்ளிக்கு நிதி பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் தனது நேரம் முழுவதையும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் செலவிட்டார். சீக்கிரமே அவர் ஆபர்சூனிட்டி பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தக் குழந்தைகளுக்காக வாழ்வை அர்பணித்தார். பல புதிய முறைகள் மூலம் கல்வியையும் வாழ்க்கைக்கு தேவையான பயிற்சியையும் கைத்தொழில்களும் கற்றுக் கொடுத்து முப்பது ஆண்டுகளாக அவர்களது வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மனவள குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறந்த பள்ளி என்று தேசிய விருது, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, பாரத் எக்ஸலன்ஸ் விருது போன்ற விருதுகளை தனது தன்னலமற்ற சேவைக்குப் பெற்றுள்ளார்.


0 comments:
கருத்துரையிடுக