செயலூக்கத்திற்கான விருது
லெ.சொக்கலிங்கம்
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி(அரசு உதவி பெற்ற பள்ளி)
லெ.சொக்கலிங்கம்
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி(அரசு உதவி பெற்ற பள்ளி)
பாடங்களைத் தாண்டி கல்வி இருக்கிறது அதைக் கற்றுக் கொடுப்பது ஆசிரியரின் கடமை என்று நம்புகிறவர். பள்ளியில் பல அறிஞர்களை அழைத்து மாணவர்களோடு கலந்துரையாட விடுகிறார். பேச்சு மாதம், கவிதை மாதம், நடன மாதம், ஓவிய மாதம், பாட்டு மாதம், கதை மாதம் என அனைத்து மாதங்களையும் வரைப்படுத்தி மாணவர்களை சிறந்தவர்களாக்குகிறார்.பிளாஸ்டிக் பயண்படுத்தாத வாழ்க்கை முறைக்கு மாணவர்களைத் தயார்படுத்துகிறார். நூலகங்களுக்கு அழைத்துச் சென்று புத்தகங்களை அறிமுகப்படுத்துவதோடு நில்லாமல் வங்கி தபால் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை விளக்குகிறார். மாணவர்கள் சுயமாக கற்கும் திறனை வளர்ப்பதற்கு ஏதுவாக கல்லூரிகளுக்கு பல்கலைக்கழங்களுக்கு கூட்டிச் சென்று ஆய்வகங்களில் நடக்கும் ஆராய்ச்சிகளை அறியச் செய்கிறார். வங்கிகள் என்று அழைத்துச் சென்று அனைத்தின் செயல்பாடுகளையும் விளக்குகிறார். இவர் முயற்சியால் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் தங்கள் நேரத்தை இப்பள்ளிக்காக செலவிடுகிறார்கள்.
நரிக்குறவர் மற்றும் தொட்டிய நாயக்கர் இன மக்களின் வாழ்விடங்களுக்கே தமது மாணவர்களுடன் சென்று கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களின் பிள்ளைகளுக்கும் பயிற்றுவிக்கிறார்.
மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது தாய்மார்களையும் அழைத்து பெண் மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கி வருகிறார்.

0 comments:
கருத்துரையிடுக